Homeசெய்திகள்உலகம்ஐநா மாநாட்டில் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை! “ஈரானை அழித்தொழிக்க நேரிடும்” – மறுபுறம் 3 மணி...

ஐநா மாநாட்டில் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை! “ஈரானை அழித்தொழிக்க நேரிடும்” – மறுபுறம் 3 மணி நேர ரகசிய பேச்சுவார்த்தை!

-

- Advertisement -

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் அந்த நாட்டை முற்றிலுமாக அழிக்க நேரிடும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம், ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) நிலவரம் மற்றும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு இடையே மூன்று மணி நேரம் நீடித்த முக்கியமான சந்திப்பு ஒன்று நடந்துள்ளதாக அவர் வெளிப்படுத்தியுள்ளது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

பேச்சுவார்த்தையும்… சமரச முயற்சியும்…

ஐநா பொதுப்பேரவைக் கூட்டத்தின் இடையே அமெரிக்க மற்றும் ஈரான் பிரதிநிதிகள் நேருக்கு நேர் மற்றும் மத்தியஸ்தர்கள் மூலமாக நீண்ட விவாதங்களை மேற்கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிகாரிகளுக்கும் ஈரான் தரப்புக்கும் இடையே மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், திருப்திகரமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

ஹோர்முஸ் ஜலசந்தி பாதையைத் திறப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான விவகாரங்கள் இந்தத் தூதரக முயற்சியின் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதனிடையே, அமெரிக்கா தனது ராணுவ அழுத்தத்தை குறைத்து ஈரான் மீதான முற்றுகையை தளர்த்தினால், ஹோர்முஸ் ஜலசந்தியை 7 நாட்களுக்குள் மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் நேரடி எச்சரிக்கை

முன்னதாக ஐநா பொதுப்பேரவையில் உரையாற்றிய டிரம்ப், ஈரானைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசுகையில்,

 “ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு, அவர்கள் நாட்டை வளமானதாக மாற்ற அனுமதிக்கலாமா அல்லது இஸ்லாமிய குடியரசை மிக விரைவில் முற்றிலுமாக அழித்தொழிக்கலாமா என்ற பெரிய முடிவு என் கையில் உள்ளது”

எனத் தெரிவித்தார். மேலும், ஈரானின் அச்சுறுத்தல்களை உலக நாடுகள் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்றும், ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக தனிமைப்படுத்தக் கோரி அனைத்து நாடுகளும் தம்மோடு கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஈரானின் நிலைப்பாடு என்ன?

மறுபுறம், அமெரிக்கா தனது ராணுவ அழுத்தங்களைக் குறைத்து, ஈரான் மீதான முற்றுகையை நீக்கினால், ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு வாரத்திற்குள் மீண்டும் திறக்கத் தயார் என ஈரான் தரப்பு சமிக்ஞை வெளிப்படுத்தியுள்ளது. ஐநா மாநாட்டின் அரங்குக்குள் டிரம்ப் ஈரானைக் விமர்சித்தபோது, ஈரான் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் வெளிநடப்பு செய்தனர்.

போர்க்களத்தில் ஒருபுறம் கடுமையான மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலும், மறுபுறம் திரைமறைவில் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்திருப்பது மத்திய கிழக்கு அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது.

நேபாள வெள்ள நிவாரணம்: ரூ.310 கோடி கூடுதல் உதவி அறிவித்த அமெரிக்கா!

MUST READ