Homeசெய்திகள்உலகம்ரஜினி 'ஸ்டைலில்’ தமிழில் தீபாவளி வாழ்த்து கூறிய மலேசிய பிரதமர்!

ரஜினி ‘ஸ்டைலில்’ தமிழில் தீபாவளி வாழ்த்து கூறிய மலேசிய பிரதமர்!

-

- Advertisement -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தமிழில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகரான அவர், ஜெயிலர்-2 திரைப்பட பாணியில் ஸ்டைலாக தோன்றி வாழ்த்து தெரிவித்திருப்பது பலரையும் கவர்ந்துள்ளது.

we-r-hiring

ரஜினி பாணியில் மாஸ் என்ட்ரி!

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் நவம்பர் 6-ம் தேதி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தீபாவளி வாழ்த்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில் தமிழ் திரைப்படத்தின் கதாநாயகனைப் போல ஸ்டைலாக தோன்றும் அன்வர் இப்ராகிம், தமிழில் “தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று கூறுகிறார். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் அவரது தோற்றமும், வசனங்களும் அமைந்துள்ளன.

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுங்கள்!

இந்த வீடியோவில் கார் பழுதாகி தவிக்கும் இளைஞர் ஒருவருக்கு அன்வர் இப்ராகிம் அறிவுரை வழங்குகிறார். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும், வீட்டிற்குச் சென்று தாயை அன்புடன் அரவணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

இறுதியில் அவரது அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் இளைஞரின் கார் மீண்டும் இயங்கத் தொடங்குவது போன்று நகைச்சுவையாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய பிரதமர்!

இதற்கிடையே, மலேசியாவின் பன்முக கலாசார மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் தீபாவளி பண்டிகையை நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் அன்பை வளர்க்கும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

கலாசார மற்றும் மத வேறுபாடுகள் இருந்தாலும், அன்பு, புரிதல், அமைதி ஆகிய பொதுவான மதிப்புகள் மக்களை ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா பாணியில் மலேசிய பிரதமர் வெளியிட்டுள்ள இந்த தீபாவளி வாழ்த்து வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

குத்துவிளக்கேற்றிய டிரம்ப்! வெள்ளை மாளிகையில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் – அனுமன் சாலிசா பரிசளித்த இந்தியர்!

MUST READ