Homeசெய்திகள்சினிமாசெல்வராகவன், யோகிபாபு கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

செல்வராகவன், யோகிபாபு கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

-

- Advertisement -

செல்வராகவன் மற்றும் யோகிபாபு இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். பீஸ்ட், சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் செல்வராகவன் நன்றாக நடித்திருந்தார்.

we-r-hiring

தற்போது  விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க்க ஆண்டனி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு மூவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ரங்கநாதன் என்பவர் இயக்குகிறார். இந்தப் படம் அரசியல் கதைக் களத்தை மையமாக வைத்து உருவாக இருக்கிறதாம். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு நடிகர் சுனில் தற்போது தமிழிலும் பரவலாக நடித்து வருகிறார். ‘மார்க் ஆண்டனி’ படத்தில் சுனில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் சுனில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ