ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் தொடர் போரினால், உலகிலேயே மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட அமெரிக்காவின் ஆயுதக் கிடங்குகள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அதிநவீன ஏவுகனைகளின் கையிருப்பு பெருமளவு குறைந்துள்ளதால், பனிப்போர் காலத்து பழைய ஏவுகனைகளைத் தூசு தட்டி களமிறக்கும் கட்டாயத்திற்கு பென்டகன் தள்ளப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் போர்ச் செலவும், ஆயுதப் பற்றாக்குறையும்
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஒரு நாளுக்கு மட்டும் சுமார் ரூ.10,000 கோடி வரை செலவிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் முக்கிய இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்தப்படும் ஆமி டாக்டிகல் மிசைல் சிஸ்டம் மற்றும் பிரசிஷன் ஸ்ட்ரைக் மிசைல்ஸ் போன்ற அதிநவீன ஆயுதங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு தீர்ந்துவிட்டன.

குறிப்பாக, கடற்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் நீண்ட தூர ‘டோமஹாக்’ (Tomahawk) ஏவுகனைகளின் கையிருப்பு 50% வரை குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று மினாப் நகரில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட பல முக்கிய ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்த டொமஹாக் ஏவுகனைகளே பயன்படுத்தப்பட்டன. இந்த வகை ஏவுகனைகளை புதிதாகத் தயாரிக்க குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், அமெரிக்க ராணுவம் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.
பலவீனமடையும் வான் பாதுகாப்பு வலையம்
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகனைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளப் பயன்படுத்தப்படும் ‘தாட்’ (THAAD) வான் பாதுகாப்பு அமைப்பின் இடைமறிப்பு ஏவுகனைகளில் 80 சதவீதமும், ‘பேட்ரியாட்’ (Patriot) அமைப்பின் கையிருப்பில் 65 சதவீதமும் காலியாகியுள்ளன [03:41]. இதனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் எழுந்துள்ளது.
ஏர்-பிரிட்ஜ் (Air Bridge) மூலம் ஆயுத இடமாற்றம்
மத்திய கிழக்கு போர்க்களத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ஐரோப்பா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த பேட்ரியாட், தாட் மற்றும் டொமஹாக் ஏவுகனைகள் அதிவேகமாக மாற்றப்பட்டு வருகின்றன . கடல் வழியாக ஆயுதங்களைக் கொண்டு செல்ல வாரக்கணக்கில் காலம் ஆகும் என்பதால், ராட்சத சரக்கு விமானங்களைக் கொண்டு ‘ஏர்-பிரிட்ஜ்’ (Air Bridge) என்ற பெயரில் 24 மணி நேரமும் தடையின்றி ஆயுதங்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக வழியில் காற்றில் பறந்தபடியே எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

பனிப்போர் காலத்து ஆயுதங்களுக்கு மவுசு
தற்போதைய பற்றாக்குறையைச் சமாளிக்க, பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனை எதிர்கொள்ளத் தயாரிக்கப்பட்டு அரிசோனா பாலைவனச் சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள பழைய ஏவுகனைகளை நவீன ஜிபிஎஸ் மற்றும் சிப்ஸ் பொருத்திப் புதுப்பிக்கும் பணியில் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இதற்கிடையே, பிற பிராந்தியங்களில் இருந்து ஆயுதங்களை மாற்றுவதால் ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் அமெரிக்காவின் பாதுகாப்புத் திறன் தற்காலிகமாகப் பலவீனமடையும் சூழல் உருவாகியுள்ளது. ஈரானின் மலிவான ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க விலையுயர்ந்த ஏவுகனைகளை அதிகமாக விரயம் செய்ததன் விளைவை அமெரிக்கா தற்போது சந்தித்து வருவதாக ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர்
