Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரியைத் திசைதிருப்பும் அரசியல் நாடகம்! முதல்வர் விஜய்யின் எம்.பி.க்கள் கூட்டத்தை அதிரடியாகப் புறக்கணித்த பிரதானக் கட்சிகள்!

காவிரியைத் திசைதிருப்பும் அரசியல் நாடகம்! முதல்வர் விஜய்யின் எம்.பி.க்கள் கூட்டத்தை அதிரடியாகப் புறக்கணித்த பிரதானக் கட்சிகள்!

-

- Advertisement -
தமிழகத்தை உலுக்கி வரும் காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களை திசைதிருப்பும் நோக்கில், தமிழக வெற்றிக்கழக அரசு அரங்கேற்றியுள்ள புதிய அரசியல் நாடகம் அம்பலப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்ற போர்வையில் முதல்வர் விஜய் கூட்டிய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை, திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் திட்டவட்டமாகப் புறக்கணித்துள்ளன.

விஜய்

திசைதிருப்பும் அவசர நாடகம்:
தமிழக உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் அரசு, உச்ச கட்டப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டத் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் இதுவரை முறையான மசோதாவோ அல்லது அலுவல் பட்டியலோ இடம்பெறாத ஒரு விஷயத்திற்காக, திடீரென எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. காவிரிப் போராட்டத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளன.
கண்டுகொள்ளாத எதிர்க்கட்சிகள் – படுதோல்வியைச் சந்தித்த தலைமை:
57 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழகத்தில், முதல்வர் விஜய்யின் இந்தத் தனிக்காட்டு ராஜா வழிமுறைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டிய அழைப்பிதழை விட்டுவிட்டு, நேரடியாக எம்.பி.க்களுக்கு வலைவீசிய அரசின் தந்திரம் பலிக்கவில்லை.
முடிவில், திமுக, அதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகப் புறக்கணித்துள்ளன. மொத்தமுள்ள 57 பேரில் வெறும் 20 பேர் மட்டுமே பெயரளவுக்குப் பங்கேற்கவுள்ள நிலையில், முதல்வரின் இந்த ஒற்றையாட்சி முயற்சி ஆரம்பத்திலேயே பெரும் சறுக்கலைச் சந்தித்துள்ளது.
பின்னணியில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பயம்?
இந்தத் திடீர் கூட்டத்திற்குக் பின்னணியில் தொகுதி மறுவரையறை விவகாரம் மட்டுமல்லாமல், வரவிருக்கும் காலங்களில் வரக்கூடும் என்று அஞ்சப்படும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்த ஆளும் கட்சியின் மறைமுக அச்சமே பிரதானக் காரணமாகக் கூறப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ளத் தயங்கும் தவெக அரசு, தங்களின் அரசியல் பலவீனங்களை மறைக்கவே இதுபோன்ற கூட்டங்களை அரங்கேற்றி வருவதாக மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
தமிழகத்தின் உண்மையான உரிமைகளையும், காவிரிப் பிரச்சினையையும் கண்டுகொள்ளாமல், விளம்பரத்திற்காக நடத்தப்படும் இந்த வெற்று அரசியல் நாடகத்திற்குத் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்ற எச்சரிக்கைக் குரல்கள் தற்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

தனியார் கைக்கு மாறும் 16 மருத்துவக் கல்லூரிகள்! – ஆலோசனை வழங்கவே ரூ.8.27 கோடியா?

we-r-hiring

 

MUST READ