Homeசெய்திகள்தமிழ்நாடுதொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே பேராபத்து: மரக்காணத்தில் அமைச்சர் வன்னியரசு பேட்டி!

தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே பேராபத்து: மரக்காணத்தில் அமைச்சர் வன்னியரசு பேட்டி!

-

- Advertisement -

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது தென்னிந்திய மாநிலங்களுக்கு மிகப்பெரிய பேராபத்தாக முடியும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே பேராபத்து: மரக்காணத்தில் அமைச்சர் வன்னியரசு பேட்டி!

புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மரக்காணம் ஒன்றியம், எம்.புதுப்பாக்கம் மற்றும் கூனிமேடு ஊராட்சிகளில் மொத்தம் ரூ.92.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு புதிய அங்கன்வாடி மையங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கலந்துகொண்டு புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

we-r-hiring

தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே பேராபத்து: மரக்காணத்தில் அமைச்சர் வன்னியரசு பேட்டி!

தொடர்ந்து, கூனிமேடு திடீர் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், அப்பகுதி மக்களுக்கு மின்சார வசதி மற்றும் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியருடன் தொலைபேசி மூலம் பேசி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், மரக்காணம் அருகே உள்ள ஆட்சிக்காடு கிராமத்தில் நீண்ட நாட்களாகச் சுடுகாட்டுப் பாதை இல்லாமல் தவித்து வந்த பொதுமக்களுக்காக, மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தயாளன் தனது சொந்தச் செலவில் நிலத்தை வாங்கி தானமாக வழங்கிய இடத்தில் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாகச் சாலைப் பணிகளைத் தொடங்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சரின் பேட்டி: இதனைத் தொடர்ந்து மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் வன்னியரசு கூறியதாவது, “திண்டிவனம் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. திண்டிவனத்தில் உள்ள ஏரிகளைத் தூர்வாரும் பணிகள் இன்று மாலை தொடங்குகின்றன. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன், தொகுதி மக்களுக்கான அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் முழு வீச்சில் செயல்படுத்தப்படும்” என்றார்.

தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கு பேராபத்து: தொடர்ந்து பேசிய அவர், காவிரி மற்றும் தொகுதி மறுவரையறை விவகாரங்கள் குறித்துக் கூறியதாவது, “காவிரிப் பிரச்சனையும், தொகுதி மறுவரையறையும் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான விவகாரங்கள். குறிப்பாக, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்தாக முடியும். வடமாநிலங்களை மட்டுமே மையமாக வைத்து ஆட்சி அமைக்கும் நிலையை உருவாக்கவே இத்தகைய திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெளிவான நிலைப்பாடு ஆகும். தமிழ்நாட்டிற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 39 மக்களவை தொகுதிகளும் குறைக்கப்படாமல் அப்படியே தொடர வேண்டும். அதேபோல், காவிரி விவகாரத்தில் மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.”

பஞ்சமி நிலங்கள் மீட்பு:
“தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை முழுமையாகக் கண்டறிந்து மீட்டெடுக்கத் தனியாக ஓர் ஆணையம் அமைக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலங்களைக் கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன், பஞ்சமி நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.”

சிறைத்துறை மரணங்கள் குறித்த கருத்து:
மேலும் பேசிய அவர், “சிறைகளில் கைதிகள் உயிரிழப்பது மிகுந்த கவலையளிக்கிறது. காவல்துறை மற்றும் சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பு அரசுக்கும் காவல்துறைக்கும் உண்டு. மனித உரிமை மீறல்கள் யார் செய்தாலும் அது குற்றமே. சட்டமும் காவல்துறையும் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியின்போது உள்ளாட்சிப் பிரதிதிகளும், துறை சார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

ரயில்வே காவல்துறையில் 40% காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வாலுக்கு ஜாபர் அலி கடிதம்!

MUST READ