Homeசெய்திகள்உலகம்விண்வெளியில் இருந்து பூமிக்கு மேல் மாயாஜாலம்... அனில் மேனன் எடுத்த 'அரோரா' பேரழகு பிக்ஸ்!

விண்வெளியில் இருந்து பூமிக்கு மேல் மாயாஜாலம்… அனில் மேனன் எடுத்த ‘அரோரா’ பேரழகு பிக்ஸ்!

-

- Advertisement -

பூமிக்கு மேலே வளிமண்டலத்தில் மிக அற்புதமாக ஒளிரும் ‘அரோரா’ (Aurora) எனப்படும் இயற்கை துருவ ஒளியை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் தனது ஐபோன் மூலம் மிகத் தெளிவாகப் படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த விண்வெளிப் புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் பெருமளவில் வைரலாகி வருகின்றன.விண்வெளியில் இருந்து பூமிக்கு மேல் மாயாஜாலம்... அனில் மேனன் எடுத்த 'அரோரா' பேரழகு பிக்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், விண்வெளியில் இருந்து பூமிக்கு மேலே பச்சை மற்றும் நீல நிறங்களில் மாயாஜாலம் போல மிளிரும் அரோரா ஒளியைக் கண்டு வியந்துள்ளார்.

we-r-hiring

ஐபோனில் பதிவான பேரழகு
பொதுவாக விண்வெளியில் இருந்து இதுபோன்ற அரிய நிகழ்வுகளைப் படம்பிடிக்கப் பெரிய அளவிலான உயர் ரக தொழில்முறை கேமராக்கள் பயன்படும் நிலையில், அனில் மேனன் இதனைத் தனது ஐபோன் (iPhone) மூலம் மிக தத்ரூபமாகப் படம் பிடித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விண்வெளியில் இருந்து பூமியைப் பார்ப்பதே தனி அனுபவம். அதிலும், பூமிக்கு மேல் இந்த அரோரா பேரழகு ஒளிரும் காட்சியை ஐபோனில் பதிவு செய்தது மிகவும் சுவாரசியமான ஒன்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.விண்வெளியில் இருந்து பூமிக்கு மேல் மாயாஜாலம்... அனில் மேனன் எடுத்த 'அரோரா' பேரழகு பிக்ஸ்!

அரோரா என்றால் என்ன?
சூரியனில் இருந்து வெளிப்படும் மின்னூட்டம் பெற்ற துகள்கள் (Charged Particles), பூமியின் காந்தப்புலம் மற்றும் வளிமண்டல வாயுக்களுடன் மோதும்போது உருவாகும் இயற்கை ஒளி வெளிச்சமே ‘அரோரா’ என்று அழைக்கப்படுகிறது. இது வழக்கமாக பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதிகளில் வான்வெளியில் வண்ணக் கோலங்களாகக் காட்சி அளிக்கும். விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த அபூர்வப் புகைப்படங்கள், இயற்கையின் பேரழகை உலகிற்குப் பறைசாற்றுவதுடன், கேமரா பிரியர்களையும் விண்வெளி ஆர்வலர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளன.

ஜப்பானைத் தாக்கிய ‘டால்பின்’ புயல்: ஒகி மற்றும் ககோஷிமா தீவுகளில் மின்சாரம் துண்டிப்பு; சீனா முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை!

MUST READ