Homeசெய்திகள்வானிலைதமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழை நீடிக்கும்: விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன்...

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழை நீடிக்கும்: விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!

-

- Advertisement -

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழை நீடிக்கும்: விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், திருச்சி, ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சில்லென்ற சென்னை! கோயம்பேடு, அடையாறு, வடபழனியில் கொட்டித் தீர்க்கும் மழை… வானிலை மையம் அதிரடி அப்டேட்!

MUST READ