Homeசெய்திகள்கட்டுரைமக்கள்தொகை பெருக்கத்திற்குப் பரிசா? தென்மாநிலங்களின் கழுத்தை அறுக்கும் தொகுதி மறுசீரமைப்புச் சதி!

மக்கள்தொகை பெருக்கத்திற்குப் பரிசா? தென்மாநிலங்களின் கழுத்தை அறுக்கும் தொகுதி மறுசீரமைப்புச் சதி!

-

- Advertisement -

நாட்டின் அதிகாரப்பகிர்வைத் தீர்மானிக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தற்போது இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள்தொகையைக் குடும்பக் கட்டுப்பாடு மூலம் கட்டுப்படுத்தியதற்காகத் தென்மாநிலங்களை ஒழிிகட்டத் துடிக்கும் மத்திய அரசின் கோர முகத்திற்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ’25 ஆண்டு காலத் தடை’ (Freeze) தீர்மானம் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஆலோசகரான டாக்டர் பொன்ராஜ் இந்த விவகாரம் குறித்துப் பல திடுக்கிடும் உண்மைகளைப் போட்டுடைத்துள்ளார்.

we-r-hiring

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்குக் கிடைத்த தண்டனையா?

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 815 இடங்களை நிரப்புவதற்காக, வெறும் மக்கள்தொகையை மட்டுமே அளவுகோலாக வைத்துத் தொகுதிகளை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் சரியாக நடைமுறைப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் தங்களது அரசியல் பலத்தை இழந்து, வடமாநிலங்களின் காலடியில் அடிபணிய வேண்டிய கொடூர அவலம் அரங்கேறும். இதைக் கண்டித்துத்தான் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழக அரசு முழங்கி வருகிறது.

வெறும் ‘தடை’ தீர்மானம் நிரந்தரத் தீர்வாகாது!

அதேவேளையில், பிரச்சினையைத் தள்ளிப்போடுவது மட்டும் போதாது என்று எச்சரிக்கும் டாக்டர் பொன்ராஜ், வெறும் கால நீட்டிப்பு மட்டுமே இதற்குத் தீர்வு கிடையாது என்று வாதிடுகிறார். 1976-க்குப் பிறகு ஏற்கனவே 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மேலும் 25 ஆண்டுகளுக்கு இதை முடக்கி வைப்பது பிற்போக்குத்தனமானது என்று அவர் சாடுகிறார். வளர்ச்சியும் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்பதுதான் நிதர்சனம்.

நிர்வாகத் திறனுக்கும், வளர்ச்சிக்கும் அங்கீகாரம் எங்கே?

வெறும் மக்கள்தொகையை மட்டும் வைத்து எம்பிக்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம்? மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, ஜிடிபி பங்களிப்பு, தனிநபர் வருமானம், நிதி ஒழுக்கம், கல்வி, சுகாதாரம் மற்றும் நல்லாட்சி (Governance) போன்ற பன்முகப் பரிமாணங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

மக்கள்தொகை மற்றும் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்திற்கு 70% முக்கியத்துவமும், வளர்ச்சி, நிர்வாகத் திறன் மற்றும் சமூக நீதிக்கு 30% முக்கியத்துவமும் அளிக்கும் முறையைப் பின்பற்றினால் மட்டுமே, சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு உரிய ஊக்கத்தொகையாகக் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். மாறாக, சிறிய மாநிலங்களோ அல்லது திட்டமிட்டுப் பின்தங்கிய மாநிலங்களோ எல்லாவற்றையும் தட்டிச் செல்லும் அநீதி தடுத்து நிறுத்தப்படும்.

தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை கணக்கு அல்ல; அது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும், தென்மாநிலங்களின் உரிமைகள் மீதும் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும். மத்திய அரசு தனது அடாவடித்தனமான மக்கள்தொகை சூத்திரத்தைக் கைவிட்டு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பொருளாதாரப் பங்களிப்புக்கும் மதிப்பளிக்கும் ஒரு நியாயமான பாதையை வகுக்க வேண்டும். மாறாக, வடமாநிலங்களின் பலத்தை மட்டும் வைத்துத் தென்மாநிலங்களை ஓரங்கட்ட நினைத்தால், அது இந்திய ஒருமைப்பாட்டிற்கே விடுக்கப்படும் மரண அடியாக முடியும்!

“ஸ்கிரிப்ட் இல்லாட்டி வாயே திறக்க மாட்டீங்களா விஜய் சார்?” – தவெக ஆட்சியை விளாசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

MUST READ