Homeசெய்திகள்தமிழ்நாடுடிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: கூடுதலாக 20 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வர்கள் மகிழ்ச்சி!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: கூடுதலாக 20 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வர்கள் மகிழ்ச்சி!

-

- Advertisement -

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (Group 1 Services) தேர்வில், கூடுதல் காலிப் பணியிடங்களைச் சேர்த்து தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: கூடுதலாக 20 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வர்கள் மகிழ்ச்சி!

கூடுதல் காலிப் பணியிடங்கள் சேர்ப்பு
TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, குரூப்-1 தேர்வுக்கான Addendum No. 5B/2026 அறிவிப்பு நேற்று (ஆகஸ்ட் 13, 2026) வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுடன் தற்போது கூடுதலாக 20 காலிப் பணியிடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்காகத் தொடக்கத்தில் 26 காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தன. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து, தற்போது கூடுதலாக 20 இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள் மற்றும் விவரங்கள்

  •  அறிவிப்பு வெளியான நாள்: ஜூன் 23, 2026
  •  தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இடங்கள்: 26 இடங்கள்
  •  விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 29, 2026
  •  விண்ணப்பத் திருத்த காலம்: ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 4, 2026 வரை
  •  முதல்நிலைத் தேர்வு (Prelims) நாள்: செப்டம்பர் 27, 2026

இது தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் திருத்தப்பட்ட அறிவிப்பு விவரங்களை தேர்வர்கள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலம் பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களம்: தி.மு.க. – பா.ஜ.க. இணக்கமும், த.வெ.க.வின் செயல்பாடுகளும் – மருத்துவர் காந்தராஜ் விமர்சனம்!

MUST READ