Homeசெய்திகள்தமிழ்நாடுலஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காரசாரம்! 4 வாரங்களுக்குள்...

லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காரசாரம்! 4 வாரங்களுக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு!

-

- Advertisement -

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, அரசு வழக்கறிஞர் நியமன நிலவரம் குறித்து கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளது.லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காரசாரம்! 4 வாரங்களுக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு!

நீதிமன்றத்தின் கடுமையான கேள்விகள்: விசாரணையின் போது நீதிபதி கருத்து தெரிவிக்கையில், “லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? இவ்வாறு லஞ்சம் கொடுத்துப் பதவிக்கு வரும் வழக்கறிஞர்கள் நாட்டைக் காப்பாற்றுவார்களா? அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா?” என்று மிகக் காரசாரமான கேள்விகளை முன்வைத்தார்.

we-r-hiring

4 வாரங்களில் விசாரணைக்கு உத்தரவு: மேலும், அரசு வழக்கறிஞர் நியமன முறைகேடு புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரங்களுக்குள் விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் சுருக்குமடி வலையை மீனவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்காதது ஏன்? பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

MUST READ