Homeசெய்திகள்சினிமாதிருவண்ணாமலையில் புதிய தமிழ் திரைப்படத்தின் தொடக்க விழா: தந்தை-மகள் பாசக் கதையாக உருவாகும் ‘ஹாரர்’!

திருவண்ணாமலையில் புதிய தமிழ் திரைப்படத்தின் தொடக்க விழா: தந்தை-மகள் பாசக் கதையாக உருவாகும் ‘ஹாரர்’!

-

- Advertisement -

திருவண்ணாமலை மாநகராட்சி செங்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில், படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான சதீஷ்குமார், கதாநாயகி மற்றும் குணச்சித்திர நடிகர்கள் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கமாக, படத்தின் கதைப் புத்தகம் மற்றும் போஸ்டர் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

we-r-hiring

30 நாட்களில் படப்பிடிப்பு:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இயக்குநர் சதீஷ்குமார் கூறுகையில், “இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிடப்பட்டு, சுமார் 30 நாட்களுக்குள் முழுப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

மேலும் படத்தின் கதைக்களம் குறித்துப் பேசுகையில், “இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இதில் காமெடி, காதல் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், ஒரு தந்தைக்கும் அவரது மகளுக்கும் இடையேயான உன்னதமான பாசத்தை வெளிப்படுத்துவதே படத்தின் முக்கிய கருவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

கதைக்கே முக்கியத்துவம்:

திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த கேள்விக்கு, குறிப்பிட்ட அளவிலான பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்படும் என்றார். மேலும், புதுமுக நடிகர்களின் படம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “புதுமுக நடிகர்களாக இருந்தாலும் சரி, ஏற்கனவே புகழ் பெற்ற நடிகர்களாக இருந்தாலும் சரி, நல்ல கதைக்களமும் சிறந்த நடிப்பும் இருந்தால் ரசிகர்கள் எப்போதுமே திரைப்படங்களை ஏற்றுக் கொள்வார்கள்; வெற்றி பெறச் செய்வார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இப்படமானது தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விழாவில் கலந்துகொண்ட கதாநாயகி, இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற தனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார்.

“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!

MUST READ