உலகப் புகழ்பெற்ற ‘ரிச் டாட், புவர் டாட்’ (Rich Dad, Poor Dad) புத்தகத்தின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி, தமக்கு 1.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,400 கோடி) கடன் இருப்பதாகக் கூறி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ரியல் எஸ்டேட் முதலீடும் மலைக்க வைக்கும் கடனும்:
தற்போது 79 வயதாகும் ராபர்ட் கியோசாகி, நிதி மேலாண்மை மற்றும் முதலீடு குறித்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது ரியல் எஸ்டேட் துறையில் செய்துள்ள முதலீடுகளுக்காகவே பெருமளவில் கடன்களை வாங்கியுள்ளதாகத் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இந்த முதலீடுகள் காரணமாகவே அவரது கடன் மதிப்பு ரூ.11,400 கோடியை எட்டியுள்ளது.

செல்வந்தர்களின் நிதி உத்தி:
இவ்வளவு பெரிய தொகையைக் கடனாக வைத்திருப்பது குறித்து விளக்கமளித்துள்ள அவர், இதனை ஒரு நேர்மறையான உத்தியாகவே பார்க்கிறார். தொடர்ச்சியாக வருமானம் ஈட்டித் தரக்கூடிய சொத்துகளை (Income-generating assets) வாங்குவதற்காகக் கடன் பெறுவதுதான் செல்வந்தர்கள் பின்பற்றும் நடைமுறை என்றும், அதற்கான ஒரு சிறந்த உதாரணமாகவே தன்னுடைய இந்தக் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடனைப் பயன்படுத்தி சொத்துகளை உருவாக்குவதுதான் நிதி சுதந்திரத்துக்கான வழிகளில் ஒன்று என்பதை அவர் இதன்மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
4.4 கோடி பிரதிகள் விற்று சாதனை படைத்த புத்தகம்:
பள்ளிகளில் கற்றுத் தரப்படாத நிதிச் சுதந்திரம், சேமிப்பை விட முதலீடு மற்றும் சொத்துகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து ராபர்ட் கியோசாகி எழுதிய ‘ரிச் டாட், புவர் டாட்’ புத்தகம் உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். இதுவரை இந்தப் புத்தகம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, சுமார் 4.4 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி மாபெரும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் ரகசிய அணு உலை! Assad ஆட்சிக்காலத்தின் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட IAEA!
