Homeசெய்திகள்விளையாட்டுஆப்கானிஸ்தான் டி20 தொடர்: இந்திய அணியில் புதிய தொடக்க ஜோடி! சஞ்சு சாம்சன் - வைபவ்...

ஆப்கானிஸ்தான் டி20 தொடர்: இந்திய அணியில் புதிய தொடக்க ஜோடி! சஞ்சு சாம்சன் – வைபவ் சூர்யவன்ஷி களமிறங்க வாய்ப்பு?

-

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகச் சஞ்சு சாம்சன் மற்றும் இளம் வீரா் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களமிறக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆப்கானிஸ்தான் டி20 தொடர்: இந்திய அணியில் புதிய தொடக்க ஜோடி! சஞ்சு சாம்சன் - வைபவ் சூர்யவன்ஷி களமிறங்க வாய்ப்பு?

செப்டம்பர் 13-இல் முதல் போட்டி
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான டி20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியின் உத்தேசத் தொடக்கக் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

we-r-hiring

புதிய அதிரடிக் கூட்டணி
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரே தொடக்க வீரர்களாகக் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், வரவிருக்கும் ஆப்கானிஸ்தான் தொடரில் அனுபவமிக்க சஞ்சு சாம்சனுடன் இணைந்து இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராகக் களம் காண அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் பெற்ற சஞ்சு சாம்சன் மற்றும் இளம் ஆற்றல் மிக்க வைபவ் சூர்யவன்ஷி இணையன் தொடக்கம் இந்திய அணிக்கு அதிரடித் தொடக்கத்தை அமைத்துத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப் புதிய தொடக்க கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு: மிதாலி ராஜின் சாதனையை முறியடித்து இந்தியாவின் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையானார் ஸ்மிருதி மந்தனா!

MUST READ