Homeசெய்திகள்தமிழ்நாடுமதுராந்தகம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.5,000 விநியோகம் – தவெக மீது பகிரங்கப் புகார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.5,000 விநியோகம் – தவெக மீது பகிரங்கப் புகார்.

-

- Advertisement -

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதிதாகக் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் அரசியலில் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள வீடியோ ஆதாரங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஜீவா சகாப்தன் தனது ஊடகப் பேட்டியில் பல அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

ஓட்டுக்கு ஐயாயிரம் ரூபாய்: சிக்கிய வீடியோ ஆதாரம்!

இதுவரை திராவிடக் கட்சிகள்தான் தேர்தல்களில் பணம் கொடுத்து வருவதாகக் குற்றம் சாட்டி வந்த தவெக, தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு தலேக்கு ரூ.5,000 வீதம் பணம் விநியோகித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

தேர்தல் அரசியலில் ஊழலற்ற மாற்றத்தைத் தருவோம் என்றும், தாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்றும் கூறிவந்த தவெக தரப்பு, தற்போது அதே குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாதி அரசியல் சமன்பாடுகளும் முரண்பாடுகளும்

தவெக கட்சி அனைத்துச் சாதிகளையும் சமமாக மதிக்கிறது என்றும், சாதிய அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் கூறப்பட்டாலும், களத்தில் நிலைமை வேறுவிதமாக உள்ளதாக ஜீவா சகாப்தன் சுட்டிக்காட்டுகிறார். அந்தந்தத் தொகுதிகளில் எந்தச் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அதற்கேற்பவே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

தொடக்கத்தில் தலித் மக்களின் நலனுக்காகவே குரல் கொடுப்பதாகக் கூறிவந்த அதிக்கட்சியினர், தற்போது தேர்தல் கணக்குகளுக்காக வன்னியர் உள்ளிட்ட பிற சமூகங்களின் வாக்குகளைக் குறிவைத்து வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மௌனம் ஏன்?

அரசியல் கட்சிகள் மீது அப்பட்டமாகப் பணப் பட்டுவாடா புகார்களும், வீடியோ ஆதாரங்களும் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், தேர்தல் ஆணையமும் பொறுப்பு அதிகாரிகளும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரம் தவெக கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் சாலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடித் தீர்ப்பு!

MUST READ