தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் நகரங்களுக்கு அருகே நடைபெற்ற இந்தச் சம்பவங்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.


ஜோகன்னஸ்பர்க் அருகே 17 பேர் பலி
ஜோகன்னஸ்பர்க்கின் மேற்குப் பகுதியில் உள்ள Wedela நகரில் செயல்பட்டு வந்த மதுபான விடுதியில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஆயுதங்களுடன் வந்த 8 பேர் வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேப் டவுன் அருகே மேலும் 10 பேர் உயிரிழப்பு
இதனைத் தொடர்ந்து கேப் டவுன் அருகே உள்ள Lwandle பகுதியில் செயல்பட்டு வந்த பொழுதுபோக்கு உணவகத்தில் மற்றொரு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்
இரண்டு சம்பவங்களிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் அருகே நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல்களுக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்
தென் ஆப்பிரிக்காவில் சமீப காலங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து கவனம் பெற்றுள்ள நிலையில், இந்த இரு தாக்குதல்களும் சில நாட்கள் இடைவெளியில் நடைபெற்றுள்ளன. டர்பன் அருகே சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகை: ஈரானுக்கு வருவாய் இல்லை – டிரம்ப்
