ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘EON Space Labs’ என்ற டீப்டெக் நிறுவனம் உருவாக்கியுள்ள மிகச் சிறிய விண்வெளி தொலைநோக்கி அடிப்படையிலான ‘MIRA’ இமேஜிங் சிஸ்டத்திற்கு இந்திய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ‘A Miniaturized Telescope-Based Imaging System’ என்ற பெயரில் இந்த காப்புரிமை இந்திய காப்புரிமை அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ளது.


மிகக் குறைந்த எடையில் உயர்தரப் படங்களைப் பதிவு செய்யும் வகையில் MIRA உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் 502 கிராம் எடை கொண்ட இந்த சாதனம், ஒரே துண்டு fused silica பொருளில் இருந்து உருவாக்கப்பட்டதாக EON Space Labs தெரிவித்துள்ளது. இதன் வடிவமைப்பு நிலைத்தன்மையை அதிகரிப்பதுடன், அதிர்வுகளால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
MIRA மூலம் உயர் வரையறை கொண்ட multispectral Earth Observation படங்களைப் பதிவு செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விவசாயம், கடல்சார் கண்காணிப்பு, சுரங்கத் தொழில், விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான செயற்கைக்கோள் படத் தரவுகளைப் பெற முடியும்.
மேலும், MIRA விண்வெளிப் பயன்பாட்டுக்கான தரநிலைகளுக்கு ஏற்ப NASA standards அடிப்படையில் space-grade சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிகச் சிறிய அளவில் அதிக திறன் கொண்ட இமேஜிங் அமைப்பை உருவாக்கியிருப்பது இந்தியாவின் உள்நாட்டு விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
MIRA, ஹைதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான TakeMe2Space-ன் MOI-1A செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டுள்ளது. MOI-1A, இந்தியாவின் முதல் orbital computing satellite என அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. MIRA மற்றும் MOI-1A ஆகியவை SpaceX-ன் Transporter-18 திட்டத்தின் மூலம் அக்டோபர் 1, 2026 அன்று விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தன.
இதற்கு முன்பும் MIRA விண்வெளிப் பயணத்திற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தது. 2026 ஜனவரியில் ISRO-வின் PSLV-C62 திட்டத்தில் MIRA அனுப்பப்பட்டது. ஆனால் ராக்கெட்டின் மேல்நிலை பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக payload விண்ணில் நிலைநிறுத்தப்படவில்லை. இருந்தபோதிலும், அந்த முயற்சி MIRA-வின் இயந்திர ஒருங்கிணைப்பு, விண்வெளிப் பயணத்திற்கான packaging மற்றும் hardware readiness ஆகியவற்றைச் சோதிக்க உதவியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, ISRO-வின் Small Satellite Launch Vehicle (SSLV) மூலம் மற்றொரு orbital deployment-க்கும் நிறுவனம் தயாராகி வருகிறது. விண்வெளி மட்டுமின்றி, இந்திய பாதுகாப்புத் துறைக்கான நீண்ட தூர electro-optical imaging systems உருவாக்கும் பணியிலும் EON Space Labs ஈடுபட்டு வருகிறது.
உள்நாட்டிலேயே சிறிய அளவு, குறைந்த எடை மற்றும் அதிக திறன் கொண்ட optical imaging தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம், வெளிநாட்டு தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதை குறைப்பதே தங்களது நோக்கம் என EON Space Labs இணை நிறுவனர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
வெறும் 502 கிராம் எடையில் விண்வெளியில் இருந்து பூமியை உயர் தரத்தில் படம் பிடிக்கும் திறன் கொண்ட MIRA-வுக்கு இந்திய காப்புரிமை கிடைத்திருப்பது, இந்தியாவின் வளர்ந்து வரும் தனியார் விண்வெளி மற்றும் deeptech துறையில் கவனம் பெற்றுள்ள புதிய சாதனையாக அமைந்துள்ளது.
