Homeசெய்திகள்உலகம்‘ஃபிளை துபாய்’ விமானத்தை கடத்த முயன்றது திட்டமிட்ட தீவிரவாத செயல் – ஐக்கிய அரபு அமீரகம்...

‘ஃபிளை துபாய்’ விமானத்தை கடத்த முயன்றது திட்டமிட்ட தீவிரவாத செயல் – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!

-

- Advertisement -

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ‘ஃபிளை துபாய்’ விமானத்தை கடத்த முயற்சி செய்த சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத செயல் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஓமனைச் சேர்ந்த துணை பைலட்டிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

we-r-hiring

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற ‘ஃபிளை துபாய்’ விமானத்தை, அதில் பணியாற்றிய ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது விமானத்தின் இந்திய பைலட் ஸ்மித் மச்சார், துணை பைலட்டை எதிர்த்து போராடி கடத்தல் முயற்சியை முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விமானத்தில் பயணித்த இரு பைலட்கள் விமானத்தை சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர்.

விமானம் தரையிறங்கியதும் சவுதி அரேபிய போலீஸார் ஓமன் துணை பைலட்டை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ஆலோசகர் அன்வர் கார்கேஷ் வெளியிட்ட பதிவில், விமானத்தை கடத்த முயன்றது திட்டமிட்ட தீவிரவாத செயல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய பைலட் ஸ்மித் மச்சார் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விமான கடத்தல் முயற்சியின் பின்னணியில் மிகப்பெரிய தீவிரவாத சதி இருக்கலாம் என சந்தேகிப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாஆர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், முதல்கட்ட விசாரணையில் ஓமன் துணை பைலட்டுக்கு தீவிரவாத சிந்தனை இருந்ததற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். அதேநேரம், இந்த சம்பவத்துக்கு ஈரானுடன் தொடர்பு உள்ளதா என்பதை தற்போதைக்கு உறுதியாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விமான கடத்தல் முயற்சி தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு உலகில் புதிய வரலாறு.. மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எல் மன்சூரி நியமனம்!

MUST READ