Homeசெய்திகள்சினிமாவேட்டைக்கு தயாராகும் டைகர் முத்துவேல் பாண்டியன் – ‘ஜெயிலர் 2’ டிரெய்லர் வெளியீடு அறிவிப்பு!

வேட்டைக்கு தயாராகும் டைகர் முத்துவேல் பாண்டியன் – ‘ஜெயிலர் 2’ டிரெய்லர் வெளியீடு அறிவிப்பு!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

we-r-hiring

‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக செப்டம்பர் 29-ம் தேதி ‘ஒன் நேம்’ பாடல் வெளியானது. தொடர்ந்து இசை தொடர்பான நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

ரஜினிகாந்தின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுனில், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அக்டோபர் 5-ம் தேதி டிரெய்லர் வெளியாக இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் எப்படி? முழு திரைவிமர்சனம்!

MUST READ