Homeசெய்திகள்உலகம்பயங்கரவாத வீடியோக்கள் வைத்திருந்தாரா? – 2 ஆண்டுகளுக்கு முன்பே ஓமனால் ஓரங்கட்டப்பட்ட ஓமன் துணை விமானியின்...

பயங்கரவாத வீடியோக்கள் வைத்திருந்தாரா? – 2 ஆண்டுகளுக்கு முன்பே ஓமனால் ஓரங்கட்டப்பட்ட ஓமன் துணை விமானியின் அதிர்ச்சி பின்னணி!

-

- Advertisement -

இஸ்ரேல் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில் தலைமை விமானியை தாக்கி, விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி குறித்து விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சம்பவத்தை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக வகைப்படுத்தியுள்ளனர்.

we-r-hiring

விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் சுமித் மச்சாரை தாக்கியதாக கூறப்படும் ஹமாம் அல்-ஹம்மாமி, விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் தலையிட்டு அவரை கட்டுப்படுத்தியதையடுத்து, விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இதனிடையே, ஹமாம் அல்-ஹம்மாமி ஏற்கனவே ஓமன் ஏர் நிறுவனத்தில் பணியாற்றியபோது பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களின் காரணமாக விமானப் பணியில் இருந்து விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024-ம் ஆண்டு பயிற்சி காலத்தில் அவர் தீவிரவாத கருத்துகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் அவருக்கு விமானப் பணிக்கு தடை விதிக்கப்பட்டு, அலுவலகப் பணியில் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் தீவிரவாதம் தொடர்பான இணையதளங்களை பார்வையிட்டதாகவும், அல்-கொய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி தொடர்பான புகைப்படம் இடம்பெற்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை மற்றும் அவரது செயல்பாடுகளின் பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமன் ஏர் நிறுவனத்தில் இருந்து பின்னர் வெளியேறிய அவர், எவ்வாறு ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் துணை விமானியாக பணியில் சேர்ந்தார் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாகவே பாதுகாப்பு தொடர்பான கவலைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் விமானப் பணிக்கு அவர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்பது முக்கிய விசாரணை அம்சமாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஹமாம் அல்-ஹம்மாமியின் பின்னணி, முந்தைய பணிப்பதிவுகள் மற்றும் தீவிரவாத தொடர்புகள் குறித்த தகவல்கள் முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா – பலி எண்ணிக்கை 4,018 ஆக உயர்வு!

MUST READ