Homeசெய்திகள்சினிமாஜெயிலர் 2 வெற்றிக்கு ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

ஜெயிலர் 2 வெற்றிக்கு ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஜெயிலர் 2 திரைப்படம்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் எனத் தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் திரையுலகில் நீண்டகால நண்பர்களாகவும், முன்னணி நட்சத்திரங்களாகவும் விளங்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இடையிலான நட்பு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருப்பது இரு நடிகர்களின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ எப்படி இருக்கு? மாஸ் காட்சிகள், நெல்சனின் காமெடி – முழு விமர்சனம்!

MUST READ