Homeசெய்திகள்தமிழ்நாடுதேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் விஜய் மரியாதை!

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் விஜய் மரியாதை!

-

- Advertisement -

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் விஜய் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேவரின் திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில், சென்னை நந்தனம் சிக்னல் அருகே அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின்போது அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் உடனிருந்தனர். முதலமைச்சர் மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்களும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, விழா அரங்கில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் தேவர் சமுதாயத்தினர் உள்ளிட்டோர் வரிசையாகச் சென்று தேவரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இதனால் நந்தனம் பகுதியில் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு மக்கள் திரளாகக் கூடியிருந்தனர்.

ரத்தக் களறியாகும் வீதிகள்: அதளபாதாளத்தில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு! கேள்வி கேட்கும் அறிவுஜீவிகள் எங்கே?

MUST READ