Homeதொழில்நுட்பம்ரூ.10,000-க்கு 3 ஆண்டுகள் வேலிடிட்டி! அன்லிமிட்டெட் 5ஜி வசதியுடன் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்த ஜியோ!

ரூ.10,000-க்கு 3 ஆண்டுகள் வேலிடிட்டி! அன்லிமிட்டெட் 5ஜி வசதியுடன் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்த ஜியோ!

-

- Advertisement -

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ, ரூ.10,000 விலையில் மூன்று ஆண்டுகள் வேலிடிட்டி கொண்ட புதிய பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

ஜியோவின் இந்த ரூ.10,000 ரீசார்ஜ் திட்டத்தில் 3 ஆண்டுகள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டுதோறும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், தகுதியான பயன்பாட்டிற்கு அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வசதியும் கிடைக்கிறது.

இதுதவிர, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகின்றன.

கூடுதல் சலுகைகள்:

இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் ஹாலிவுட் சந்தா, 12 மாதங்களுக்கான கேன்வா ப்ரோ லைட் சந்தா மற்றும் 50 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய JioAICloud ஆகிய கூடுதல் சலுகைகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கும் திட்டத்தின் விலையும் சலுகைகளும் மாற்றமின்றி தொடரும் என்பதால், எதிர்கால கட்டண உயர்வுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

எங்கு ரீசார்ஜ் செய்யலாம்?

இந்த ரூ.10,000 திட்டம் நவம்பர் 7 முதல் MyJio செயலி, ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஜியோ ஸ்டோர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீசார்ஜ் மையங்கள் வாயிலாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ரூ.10,000 செலுத்த வேண்டியிருப்பதால் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்ய வாய்ப்பில்லை. இருப்பினும், நீண்டகால வேலிடிட்டி மற்றும் கூடுதல் சலுகைகளை விரும்பும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் கவனம் பெற்றுள்ளது.

ரூ.15-க்கு அன்லிமிடெட் 5G டேட்டா! புதிய பேக்கை அறிமுகம் செய்தது ஜியோ – 24 மணி நேரம் முழுமையான இணைய வசதி!

MUST READ