Homeசெய்திகள்சினிமாபாய்ஸ் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை உதறிவிட்ட சரத்குமார்... ஓப்பனா பேசிய வரலட்சுமி...

பாய்ஸ் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை உதறிவிட்ட சரத்குமார்… ஓப்பனா பேசிய வரலட்சுமி…

-

- Advertisement -

வரலட்சுமி நடிகை ஆவதில் தனக்கு விருப்பமில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட வரலட்சுமி தனக்கு பாய்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் தனது அப்பா சரத்குமார் அதை மறுத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

we-r-hiring

அது குறித்து சரத்குமாரிடம் இடம் கேட்டபோது அது உண்மை தான் என்று கூறிய சரத்குமார் வரலட்சுமி பாய்ஸ் படத்தில் நடிப்பதை நான் மறுக்கவில்லை. மொத்தமாக நடிக்கவே வேண்டாம் என்று நான் மறுத்தேன். பின்பு ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறேன் என்று அவர் கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்டேன். தற்போது அவரது திறமையை வைத்து மட்டுமே அவர் இவ்வளவு தூரம் முன்னேறி இருப்பது தான் எனக்கு பெருமை. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றவாறு பேசியுள்ளார்.

MUST READ