Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு- சவரன் ரூ.40,920க்கு விற்பனை

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு- சவரன் ரூ.40,920க்கு விற்பனை

-

- Advertisement -

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து 40 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் கடைசி சுபதினமான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

we-r-hiring

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ. 5,115-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2.20 விலை உயர்ந்து ரூ.74.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது

MUST READ