Homeசெய்திகள்சினிமாஹீரோவாக களமிறங்கும் TTF வாசன்... பிறந்தநாள் பரிசாக வெளியாகவுள்ள ஃபர்ஸ்ட் லுக்....

ஹீரோவாக களமிறங்கும் TTF வாசன்… பிறந்தநாள் பரிசாக வெளியாகவுள்ள ஃபர்ஸ்ட் லுக்….

-

- Advertisement -

Twin Throttlers என்னும் யூட்யூப் சேனல் மூலம் Moto Vlogging செய்து 2K கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமானவர்தான் TTF வாசன்.
கோவையை பூர்விகமாக கொண்ட TTF வாசன் பைக்குகளில் ஒவ்வொரு ஊராக சுற்றுலா சென்று தனது பயணங்களை வீடியோவாக யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். தனக்கென ஒரு இளம் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள TTF வாசனின் யூட்யூப் சப்ஸ்கிரைபரின் எண்ணிக்கை மட்டும் 2 மில்லியனை தாண்டி உள்ளது. அதேசமயம் பலமுறை இவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல்துறை வழக்குகளும் இவர் மீது பதியப்பட்டுள்ளன.
இருப்பினும் இவர் மோட்டோ வ்லாகிங்கை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தான் இவர் அடுத்ததாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க உள்ளார். படத்தின் இயக்குனர் பிற நடிகர்கள் இசையமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் TTF வாசனின் பிறந்தநாளான வரும் ஜூன் 29 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ