Homeசெய்திகள்தமிழ்நாடுகாரைக்கால் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

காரைக்கால் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

-

- Advertisement -

புதுச்சேரி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி துறைமுகத்திலிருந்து 20 ஆம் தேதி அதிகாலை காரைக்கால் மேடு மீனவ கிராமத்தைசேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான விசை படகில் தங்கவேல், ஆறுமுகம், பிரபு, மாணிக்கவேல், உள்ளிட்ட நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதி சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 11 மீனவர்கள் மீன் பிடிக்க கடந்த இருதினங்களுக்கு முன் சென்றனர்.

we-r-hiring

இன்று காலை கோடியக்கரை தென்கிழக்கு அருகே நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்து கரை திரும்பி கொண்டிருந்த போது 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை தற்பொழுது இலங்கைகாங்கேசன்துறை கடல் படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை செய்து பருத்தித் துறை நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த உள்ளனர். 11 மீனவர்கள் கைது செய்ததையும் மற்றும் விசைபடகை பறிமுதல் செய்யப்பட்டதைஅறிந்து மீனவர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தினர்மற்றும் உறவினர்கள் மீனவப் பெண்கள் கண்ணீரோடு கதறி அழுதனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் உடனேதலையிட்டு கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்டுத்தர வேண்டும் என மத்தியமாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க மீனவ பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ