spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதோனி, ஹரிஷ் கல்யாண் கூட்டணியின் எல் ஜி எம்...... ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

தோனி, ஹரிஷ் கல்யாண் கூட்டணியின் எல் ஜி எம்…… ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் ஹரிஷ் கல்யாண், தென்னிந்திய திரை உலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் இவர் நூறு கோடி வானவில், பார்க்கிங், ரப்பர் பந்து டீசல் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

அதே சமயம் தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இவர் நடித்துள்ள எல்ஜிஎம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

we-r-hiring

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கி இசையமைத்துள்ளார். ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நதியா இவானா யோகி பாபு தீபா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் அம்மா மற்றும் வருங்கால மனைவி இருவர்களிடம் சிக்கித் தவிக்கும் இளைஞனின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசரை எம் எஸ் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து வெளியிட்டனர். இந்த டீசரும் அதைத் தொடர்ந்து வெளியான சலனா எனும் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் இந்த படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதியில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூலை 10) நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த விழாவில் எல்ஜிஎம் படத்தின் டிரைலரும் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

MUST READ