spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹரிஷ் கல்யாண், இவனா நடித்துள்ள புதிய படம்... டீசரை வெளியிடும் தல தோனி!

ஹரிஷ் கல்யாண், இவனா நடித்துள்ள புதிய படம்… டீசரை வெளியிடும் தல தோனி!

-

- Advertisement -

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்ஜிஎம்’ படத்தின் டீசரை கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது ‘எல்ஜிஎம்'( LGM – Let’s get married) என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மகேந்திர சிங் தோனி புதிதாக தோனி என்டெர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக எல்ஜிஎம் படத்தைத் தயாரிக்கிறார்.

we-r-hiring

இப்படத்தை தோனி தயாரித்த ‘அதர்வா தி ஆர்ஜின்’ என்ற நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

அம்மா மற்றும் வருங்கால மனைவி இருவரிடமும் சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் எம்எஸ் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து இப்படத்தின் டீசரை இன்று
இரவு 7 மணியளவில் வெளியிடஇருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ