spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமங்காத்தா படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் அஜித், அர்ஜுன் கூட்டணி!

மங்காத்தா படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் அஜித், அர்ஜுன் கூட்டணி!

-

- Advertisement -

துணிவு படத்திற்குப் பிறகு அஜித் தனது 62 வது படத்தை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும், மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு நீராவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இது சம்பந்தமான அறிவிப்பு கடந்த மே மாதம் அஜித்தின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வெளியானது. அதன்படி ‘விடாமுயற்சி‘ என்ற தலைப்புடன் மோஷன் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

we-r-hiring

இதைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூன் மாதமே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்புகள் தாமதமாகி கொண்டே இருக்கிறது. ஆனாலும் இந்த படம் சம்பந்தமாக பல அப்டேட்டுகள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

அதாவது படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் அர்ஜுன் தாஸ் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. இதற்கிடையில் திரிஷா கதாநாயகியாக நடிக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, திரிஷா மற்றும் தமன்னா இருவருமே படத்தின் கதாநாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார் என்ற புதிய தகவலும் கிடைத்துள்ளது.

ஏற்கனவே அஜித், அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோரியின் கூட்டணி 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

MUST READ