Homeசெய்திகள்சினிமா100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம்..... சொன்னதை செய்து காட்டிய விஜய் தேவரகொண்டா!

100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம்….. சொன்னதை செய்து காட்டிய விஜய் தேவரகொண்டா!

-

- Advertisement -

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி வெளியான குஷி திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இயக்குனர் ஷிவா நிர்வனா இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. குஷி படம் ரிலீஸ் ஆகும் முன்பே 100 குடும்பங்களுக்கு ஒரு கோடியை வழங்குவேன் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த வெற்றி விழாவில் 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை தனது சம்பளத்திலிருந்து விஜய் தேவரகொண்டா வழங்கியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

MUST READ