Homeசெய்திகள்சினிமாஇரண்டு நாட்களிலேயே இத்தனை கோடியா? ‘ஜெயிலர் 2’ வசூல் விவரம்!

இரண்டு நாட்களிலேயே இத்தனை கோடியா? ‘ஜெயிலர் 2’ வசூல் விவரம்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியான இரண்டு நாட்களிலேயே உலகளவில் ரூ.209.10 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

இந்தியாவில் ரூ.112.10 கோடி வசூல்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

வெளியான முதல் இரண்டு நாட்களில் இந்தியாவில் ரூ.112.10 கோடியும், வெளிநாடுகளில் ரூ.97 கோடியும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் உலகளாவிய மொத்த வசூல் ரூ.209.10 கோடியை எட்டியுள்ளதாகப் பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது நாளிலும் தொடரும் வசூல்

முதல் நாளில் இந்தியாவில் ரூ.70.25 கோடி மொத்த வசூல் ஈட்டியதாகக் கூறப்படும் இப்படம், இரண்டாவது நாளில் ரூ.41.85 கோடி வசூலித்துள்ளது. இதனால் இரு நாட்களின் இந்திய மொத்த வசூல் ரூ.112.10 கோடியாக உயர்ந்துள்ளது.

ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா?

முதல் பாகமான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது இரண்டு நாட்களிலேயே ரூ.200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், படத்தின் அடுத்தகட்ட வசூல் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் எவ்வாறு அமையும் என்பதும், படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்பதும் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகை கிருத்தி ஷெட்டி – ரோகித் ஷெட்டி தயாரிப்பில் புதிய படம்!

MUST READ