spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'நான் எந்த பேட்டியும் கொடுக்கல'.... வதந்திக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்!

‘நான் எந்த பேட்டியும் கொடுக்கல’…. வதந்திக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்!

-

- Advertisement -

நடிகை நித்யா மேனன் தமிழில் 180 படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து வெப்பம், ஓகே கண்மணி, காஞ்சனா 2, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நித்யா மேனன் பேட்டி ஒன்றில், தமிழ் திரையுலகில் தனக்கு நிறைய பிரச்சனைகள் இருப்பதாகவும் தன்னை நடிகர் ஒருவர் துன்புறுத்தியதாகவும் அவர் கூறிய இருந்ததாக தகவல்கள் வெளியானது.

we-r-hiring

இது சம்பந்தமாக நித்யா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்திரிகைகள் இந்த அளவு இறங்கி இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதைவிட சிறப்பாக செயல்பட நான் வலியுறுத்துகிறேன்….. பொய்யான தகவல்….முற்றிலும் பொய்யானது…. நான் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. இந்த மாதிரியான வதந்திகளை யார் பரப்பினார்கள் என்று தெரிந்தால் எனக்கு சுட்டிக்காட்டவும்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ