Homeசெய்திகள்சினிமாதங்கலான் பட டீசர் ரெடி.... பா.ரஞ்சித் தகவல்...

தங்கலான் பட டீசர் ரெடி…. பா.ரஞ்சித் தகவல்…

-

- Advertisement -
விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.

இப்படம் கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு ஏற்பட்ட விபத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் சில வாரங்கள் கழித்து சென்னையில் தொடங்கப்பட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், தங்கலான் படத்தின் டீசர் தயாராகி விட்டதாக படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் தயாராகி விட்டதாகவும், ஒரு வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் படத்தின் முன்னோட்டம் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

MUST READ