Homeசெய்திகள்சினிமாதளபதி 68-ல் இணைந்த நடிகர் அஜ்மல்?

தளபதி 68-ல் இணைந்த நடிகர் அஜ்மல்?

-

- Advertisement -
லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க இருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில், விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் பிரபல நடிகர் அஜ்மல் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் துருதுரு என்ற படத்தில் நடித்த அவர் கோ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதைத் தொடர்ந்து நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருப்பார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பல படங்களில் நாயகனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கின்றார்.

இந்நிலையில், விஜய் நடிக்கும் புதிய படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் இணைந்து அஜ்மல் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ