- Advertisement -
சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் அருகாட்சியகத்தில் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் கார் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸில் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இங்கு 1960-களில் தொடங்கி தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட பைக், கார்கள் உள்ளிட்ட சினிமா தொடர்பான பொருட்கள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களில் செயல்படும் இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது.


