- Advertisement -
கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அனிருத் இசையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பான் இந்திய அளவில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்திற்காக சிம்பு தாய்லாந்திலும் இப்போது லண்டனிலும் தற்காப்புக் கலைப் பயிற்சியை தீவிரமாக செய்து முடித்துள்ளார். இந்தப் படம் வரலாற்று ஆக்ஷன் என்டர்டெய்னராகவும், மாஸ் காட்சிகள் நிறைந்ததாகவும் இருக்கும் என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்திருந்தார்.




