- Advertisement -
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் நடிப்பில் அனிருத் இசையமைத்து கடந்த மாதம் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜவான். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வெளியிட்ட ஜவான் திரைப்படம் வசூலில் பின்னியது. இப்படம் ரிலீஸ் ஆகி ஒரே வாரத்தில் 660 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. மாஸ், ஆக்சன், சென்டிமெண்ட் என ஒரு பக்கா கமர்சியல் என்டர்டைன்மென்ட் படமாக வெளியான ஜவான் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள ஜவான் திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்திலும் வெளியானது.

ஷாருக்கான் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் டன்கி. ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா, டாப்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.


