spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட்.... 2024 ஜூனில் படப்பிடிப்பு...

பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட்…. 2024 ஜூனில் படப்பிடிப்பு…

-

- Advertisement -
பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது ரவி பசூர் இதற்கு இசை அமைக்கிறார். இதில் பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், ஜெகதீபாபு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

சலார் PART 1 CEASE FIRE என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் படத்தின் முன்னோட்டம் வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அர்ஜூன் ரெட்டி, அனிமல் திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது. ஸ்பிரிட் என்றுதலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூனில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ