spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள சமந்தா

குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள சமந்தா

-

- Advertisement -
நடிகை சமந்தா சாகுந்தலம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து சிவா நிர்வாணா இயக்கத்தில் குஷி என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா அவருக்கு நாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்து பல தோல்விகளை சந்தித்த விஜய் தேவரகொண்டாவுக்கும் இத்திரைப்படம் ஒரு கம்பேக்காக அமைந்தது. சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ஏற்கனவே மகாநதி படத்தில் துணை கதாபாத்திரங்களாகவும் காதல் ஜோடிகள் ஆகவும் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்தியில் உருவாகும் சிட்டாடல் இந்தியா என்ற திரைப்படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தை, பேமிலி மேன் தொடரை இயக்கி ராஜ் டிகே இயக்குகின்றனர். வருண் தவான் இந்த தொடரில் நாயகனாக நடிக்கிறார்.

இதனிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அவ்வப்போது சினிமாவிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு, சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வருகிறார். தோழியோடு சேர்ந்து வெளிநாடுகளில் விடுமுறை நாட்களை கழித்தும் வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தா 2 குழந்தைகளை தத்தெடுக்க உள்ளதாக, அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாழுமாறு உறவினர்கள் கூறிய யோசனையை மறுத்த சமந்தா குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.

MUST READ