- Advertisement -
லியோ திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகை மடோனா செபாஸ்டியன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இது மட்டுமன்றி இங்கிலாந்திலும் முதல் நாளில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது லியோ திரைப்படம். மேலும், கடந்த 7 நாட்களில் 500 கோடிக்கு மேல் லியோ திரைப்படம் வசூலித்துள்ளது. தொடர்ந்து ஓடிடி தளத்திலிம் இப்படம் வெளியானது.





