- Advertisement -
விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் ஏற்படும் தாமதத்தால் பட வெளியீட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆர் எஸ் இன்ஃபோடர்மன்ட் தயாரித்திருந்த இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.


முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் சிறுமலை பகுதியில் தொடங்கப்பட்டது. மேலும் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.



