Homeசெய்திகள்சினிமாகருணாநிதியின் திரை வாழ்க்கை - ஆவணப்படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்!

கருணாநிதியின் திரை வாழ்க்கை – ஆவணப்படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்!

-

- Advertisement -
இந்தாண்டு கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் என்பதால், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, தமிழ்த் திரையுலகம் சார்பில், பெப்சி, நடிகர் சங்கம் உள்பட அனைத்து சங்கங்களுடன் ஒன்றிணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை கோலாகலமாககக் கொண்டாட முடிவு செய்தனர். அடுத்த மாதம் 4 மற்றும் 5 தேதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னை வெள்ள பாதிப்பால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. கிண்டி ரேஸ் கோர்ஸில் இந்த விழா நடக்க இருக்கிறது.

இதில் கருணாநிதியின் திரை வாழ்க்கை பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற இருக்கின்றன. இந்நிலையில், கருணாநிதியின் திரை வாழ்க்கை பற்றிய முழு ஆணவப் படத்தை இயக்குநர் விஜய் இயக்க இருக்கிறார். அதற்கான பணிகளில் அவர் இப்போது ஈடுபட்டுள்ளார். இந்த ஆவணப்படம் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது. இவர் ஜெயலலிதாவின் ‘தலைவி’ உட்பட பல படங்களை இயக்கியவர். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று தெரிகிறது.

MUST READ