நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயை தான் மிகவும் ரசிப்பதாகவும், அவருடைய தீவிர ரசிகை என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் தனது புதிய வெப் தொடர், காதல் கதைகள் மற்றும் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார்.


ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகை
சவுந்தர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், தனது தந்தை ரஜினிகாந்துக்கு அடுத்ததாக தான் பார்த்து ரசித்த நடிகை ஐஸ்வர்யா ராய் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகை என்பதை அவரிடமே நேரடியாக தெரிவித்துவிட்டதாகவும் சவுந்தர்யா கூறியுள்ளார்.
‘லவ்’ வெப் தொடர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லவ்’ வெப் தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகக் கூறிய சவுந்தர்யா, காதல் படங்களை ரசித்து பார்ப்பதாகவும், அதனால்தான் ‘வித் லவ்’, ‘ஹேஸ்டேக் லவ்’ உள்ளிட்ட படைப்புகளை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி கெமிஸ்ட்ரி
‘லவ்’ தொடரில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி என சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடர் இரண்டு அல்லது மூன்று விதமான காதல் கதைகளை பேசுவதாகவும், முந்தைய தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறையை இணைக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு வெப் தொடராகுமா?
தனது தந்தை ரஜினிகாந்தின் சுயசரிதை புத்தகம் முதலில் வெளியாக வேண்டும் என்றும், அதன் பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக உருவாக்கும் எண்ணம் இருப்பதாகவும் சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் சுயசரிதை புத்தகத்தை பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற முக்கியமான படைப்புகளுக்கு இணையாக தான் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘ஜெயிலர் 2’ குறித்து சவுந்தர்யா
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் அவர் அதிக உழைப்பை கொடுத்துள்ளதாக சவுந்தர்யா தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்காக தனது தந்தை அதிகமாக உழைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘டோரதி’ கதை திருட்டு புகார்! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது போலீஸ் கமிஷனரிடம் மனு!
