- Advertisement -
காமெடி, குணச்சித்திரம் என்று கலக்கி தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்திருந்த யோகி பாபு, இப்பொழுது கதாநாயகனாகவும், சிலபடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகனாக நடித்து வரும் வரிசையில், தற்போது யோகி பாபு நடிக்கும் ”மிஸ் மேகி” என்ற படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.

இப்படத்தில், யோகி பாபு ஆங்கிலோ இந்தியன் பாட்டி கெட்டபில் வரும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை லதா ஆர் மணியரசு இயக்குகிறார்.
மேலும், படத்தில் மெஹந்தி சர்க்கஸ் மாதம்பட்டி ரங்கராஜ் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ட்ரம் ஸ்டிக் புரடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில் பாடகர் கார்த்திக் இசையமைக்கிறார்