இந்தியன் 2 உரிமத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி, ஓடிடி நிறுவனம்
- Advertisement -
ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும ஓடிடி தளம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் இந்தியன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு 17 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரகனி, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு இந்தியன் 2 வெளியாக இருக்கிறது. 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 ஸ்பெஷல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தியன் முதல் பாகத்தில் கமல் நேதாஜி சந்திர போஸ் கெட்டப்பில் இருப்பது போன்று காணப்பட்டார்.

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனமும், ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.