spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் வருகிறார் மிஸ்டர் பீன்... ஓடிடி-யில் வெளியீடு

மீண்டும் வருகிறார் மிஸ்டர் பீன்… ஓடிடி-யில் வெளியீடு

-

- Advertisement -
90-ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத தொலைக்காாட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் பீன். இன்று வரை குழந்தைகளுக்கு பிடித்த நிகழ்ச்சியாக திகழ்ந்து வரும் பிரபல பிரைம் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக புகழ் பெற்றுள்ளது மிஸ்டர் பீன் அனிமேஷன். ரோவன் அட்கின்சனின் குரல் மற்றும் சேட்டைகளுடன் இந்த தொடரின் நான்காவது சீசன் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த அனிமேஷன் தொடர் இதுவரை 3 சீசன்களாக வெளியாகி உலகம் முழுவதும் புகழ் பெற்றிருக்கின்றன. இந்நிலையில், 4-வது சீசன் தற்போது தயாராகி வருகிறது. வார்னஸ் பிரதர்ஸ் மற்றும் சில நிறுவனங்களுடன் இணைந்து ரோவன் அட்கின்சன் இந்த சீசனை வழங்குகிறார். இதில் 4 வது சீசன் மட்டும் சுமார் 182 எபிசோடுகளை கொண்டிருக்குமாம். இதில், எபிசோட் ஒவ்வொன்றும் 11 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மிஸ்டர் பீன், தனது டெடியுடன் இணைந்து செய்யும் ரகளைகளும், சேட்டைகளும் இதில் இடம்பெற இருக்கின்றன.

நேற்று தனது 69-வது பிறந்தநாளை ரோவன் அட்கின்சன் கோலாகலமாக கொண்டாடினார். அவரது 70-வது பிறந்தநாளை முன்னிட்டும், அவரின் பணியை சிறப்பிக்கும் விதமாகும் மற்றொரு சீசன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக மிஸ்டர் பீன் தொடர் தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பாகும். தற்போது, ஓடிடி தளத்திலும் மிஸ்டர் பீன் தொடரை கொண்டு வர உள்ளனர். இதனால், 90-ஸ் கிட்ஸ்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

MUST READ