- Advertisement -
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர் தனுஷ். தமிழ் படங்கள் மட்டுமன்றி பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். சோனம் கபூருடன் சேர்ந்து ராஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மாபெரு் வெற்றி பெற்று, தனுஷிற்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. 34 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் சுமார் 94 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதைத் தொடர்ந்து ஆஹா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் அக்ஷய் குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த தனுஷ் அடுத்து ஹாலிவுட்டுக்கு பறந்தார். தனுஷ் நடிப்பில் ஹாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான படம் தி க்ரே மேன்.

மீண்டும் பாலிவுட்டில் ஒரு படம் நடித்து வருகிறார். இந்தி இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார்.இதையடுத்து, அவரது இயக்கத்தில் 50-வது திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், தனது மருமகனை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்றதிரைப்படத்தை இயக்கி வருகிறார் அடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவுடன் புதிய படத்தில் இணைகிறார்.




