Homeசெய்திகள்சினிமாகேப்டன் மில்லருக்கு கிடைத்த பிளாக்பஸ்டர் ஓபனிங்.... தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்!

கேப்டன் மில்லருக்கு கிடைத்த பிளாக்பஸ்டர் ஓபனிங்…. தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்!

-

- Advertisement -

கேப்டன் மில்லருக்கு கிடைத்த பிளாக்பஸ்டர் ஓபனிங்.... தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்!நடிகர் தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. ராக்கி, சாணிக்காயிதம் போன்ற ராவான படங்களை இயக்கியிருந்த அருண் மாதேஸ்வரன் தனுஷுடன் கூட்டணி அமைத்து உருவாகி உள்ள இப்படம் சிறந்த ஆக்சன் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. சமீபத்தில் வெளியான ஆக்சன் சரவெடியாக இருந்த டிரைலர், இப்படத்திற்கான முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியது.கேப்டன் மில்லருக்கு கிடைத்த பிளாக்பஸ்டர் ஓபனிங்.... தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்! இந்நிலையில் உலகம் முழுவதும் 900க்கும் திரையரங்குகளுக்கு மேல், குறிப்பாக தமிழ்நாட்டில் 460 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி பிரம்மாண்ட ஓபனிங் கலெக்ஷனை பெற்றுள்ளது. “கேப்டன் மில்லர்”. மேலும் படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ குவிந்து வருவதால் இந்த பொங்கலுக்குத் தரமான படமாக அமைந்து விட்டது கேப்டன் மில்லர். இந்நிலையில் படத்தின் ஓபனிங்க்கிற்கு கிடைத்த வரவேற்பிற்காக மகிழ்ச்சியுடன் தனுசை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரான தியாகராஜன். தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் இதுவரை தயாரித்த எந்த படத்திற்கும் ஏ சான்றிதழ் பெறவில்லை. கேப்டன் மில்லர் படத்தில் அதிக வன்முறைக் காட்சிகள் இருப்பதால் ஏ சான்றிதழ் தான் தணிக்கை குழுவினரால் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்காக கிளைமேக்ஸ் காட்சிகளில் நான்கு நிமிடம் வெட்டி எடுக்கப்பட்டது. பின்னர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது.கேப்டன் மில்லருக்கு கிடைத்த பிளாக்பஸ்டர் ஓபனிங்.... தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்! கிளைமாக்ஸ்-ல் 4 நிமிட காட்சி நீக்கப்பட்டதால் படத்தில் ஏதேனும் சொதப்பல் ஏற்பட்டிருக்குமோ என்று ரசிகர்கள் கலங்கி வந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் இன்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். பொங்கல் விடுமுறைக் காலம் என்பதால் அடுத்து வரும் நாட்களிலும் கேப்டன் மில்லருக்கு நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ