- Advertisement -
நடிகர் விஜய், ரஷ்மிகா மந்தானா, சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது வாரிசு திரைப்படம்.
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க வெளியான நிலையில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் அனைத்து பகுதியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது!

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் வாரிசு பட குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதில் நடிகர் விஜய், படத்தின் இயக்குனர் வம்சி, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மேலும், அந்த கொண்டாட்டத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.